|
கருவிப் பெட்டிஏனைய மொழிகள்
|
நாள்தற்காலத்தில் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாள் என்பது பூமி தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில அம்சங்களில் வேறுபட்டுக் காணப்படுகிறது.
என்பன இவ்வாறு வேறுபடுகின்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை. [தொகு] ஜார்ஜியன் முறையில் நாள்சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணித்தியாலம், நிமிடம், செக்கன் எனத் துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம் முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
ஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவுக்குப் பின் ஆரம்பமாகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் எண் பயன்படுகிறது. வாரமொன்றில் உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி ஏழு பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும். [தொகு] இவற்றையும் பார்க்கவும் |